• vilasalnews@gmail.com

இலங்கையை சேர்ந்தவர்களை படகில் கடத்தி வந்ததாக தூத்துக்குடியை சேர்ந்த 2 பேர் கைது!

  • Share on

மதுரையில் 27 பேர் பிடிபட்ட விவகாரத்தில், இலங்கைக்காரர்களை இந்தியாவுக்குள் கடத்தி வந்ததாக தூத்துக்குடியை சேர்ந்த 2 பேரை மதுரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு  கடந்த சில நாட்களுக்கு முன்பு  இலங்கையை சேர்ந்த 40 பேர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடிக்கு படகில் வந்து உள்ளனர். பின்னர் மங்களூருவுக்கு சென்று, அங்கிருந்து கனடா செல்ல இருந்தபோது பிடிபட்டனர்.  

இதேபோன்று மதுரை அருகே இலங்கையை சேர்ந்த 27 பேரை கியூ பிரிவு போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்களும் இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்ததும், அங்கிருந்து மதுரைக்கு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதுரை கியூ பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார், கைதான இலங்கையை சேர்ந்த சிலரை விசாரணைக்காக தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். அவர்கள் எந்த பகுதியில் தரையிறங்கினர். பின்னர் எங்கு தங்கி இருந்தார்கள் என்ற விவரங்களை சேகரித்தனர். 

அப்போது, இலங்கையை சேர்ந்த 27 பேரும் நடுக்கடலில் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு படகுக்கு மாற்றி விடப்பட்டதாகவும், அவர்கள் அங்கிருந்து தூத்துக்குடி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதிக்கு வந்து கரையேறியதும் தெரியவந்தது. பின்னர் 27 பேரும் தூத்துக்குடியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கிருந்து ஊரடங்கு நேரத்தில் மதுரைக்கு சென்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மதுரை கியூ பிரிவு போலீசார், இலங்கைக்காரர்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தி வந்ததாக தூத்துக்குடியை சேர்ந்த கருத்தகண்ணு, சாக்ரடீஸ் ஆகிய 2 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும், கடந்த சிலதினங்களுக்கு  முன்பு இங்கிலாந்தை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஜோனதன் தோர்ன், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 

  • Share on

சிவகளையில் முதுமக்கள் தாழிகளை திறந்து தொல்லியல் துறையினர் ஆய்வு!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை நிர்ணயம்: கூடுதல் தொகை செலுத்த வேண்டாம் - ஆட்சியர் அறிவிப்பு!

  • Share on