• vilasalnews@gmail.com

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், பாதுகாப்பு பணிகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு!

  • Share on

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தூத்துக்குடி விமான நிலைய அலுவலகத்தில், விமான நிலைய விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து இன்று (1.07.2021) மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விமான நிலைய அலுவலகத்தில், விமான நிலைய விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான 97 ஏக்கர் நிலங்களையும் மற்றும் விமான நிலையத்தில் நடந்து கொண்டிருக்கும் விரிவாக்க பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விமான நிலைய விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்தும், அனைத்து பருவ நிலைய காலங்களிலும் விமான தங்கு தடையின்றி இறங்க உதவும் DVOR இயந்திரத்தையும், தடுப்பு சுவர் கட்டும் பணிகளையும், வெடிகுண்டு செயலிழக்கும் அறையினையும், தீயணைப்பு துறையினருக்கான பயிற்சி ஒத்திகை பார்க்கும் இடத்தினையும், பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணிகளையும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு துறை அறையினையும், விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் உரிய துறைகள் மூலம் பெற்று தரப்படும். மேலும், காலதாமதமின்றி அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


ஆலோசனைக் கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், வட்டாட்சியர் ஜஸ்டின், விமான நிலைய சிறப்பு வட்டாட்சியர் லொரைட்டா, சுப்ர வேலு துணை பொது மேலாளர், (ATC) அனில்குமார் உதவி பொது மேலாளர் (CNS), கே.ஜி. பிஜு உதவி பொது மேலாளர் (ELECTRICAL) சரவணன் உதவி பொது மேலாளர் (CIVIL) எஸ்.ஜெயராமன் விமான நிலைய மேலாளர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு மானியம்!

சிவகளையில் முதுமக்கள் தாழிகளை திறந்து தொல்லியல் துறையினர் ஆய்வு!

  • Share on