• vilasalnews@gmail.com

வேப்பலோடை கிராமத்தில் 39 ஆடுகளை திருடியவர் கைது!

  • Share on

தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பலோடை கிராமத்தில் 39 ஆடுகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

வேப்பலோடை கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் இன்று தங்களுக்கு சொந்தமான ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்ததில் 39 ஆடுகளை காணாமல் போய்விட்டது.

இதனால் காணாமல் போன ஆடுகளின் உரிமையாளர்கள் அங்குள்ள பகுதிகளில் ஆங்காங்கே தேடி வந்தனர். அப்போது நாகலாபுரம் அருகே உள்ள துரைச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் மகன் முருகன் (40) என்பவர் வீரபாண்டியாபுரம் கண்மாய் அருகே ஆடுகளுடன் இருந்ததை கண்டுபிடித்தனர்.

உடனே ஆடுகளின் உரிமையாளர்கள் மேற்படி முருகனை பிடித்து தருவைக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  தருவைக்குளம் காவல் நிலையம் போலீசார் முருகனை கைது செய்து திருடிய 39 ஆடுகளையும் மீட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி ஆடுகளை விற்பனை செய்வதற்காக திருடியது வந்தது தெரியவந்தது.

விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் ஆடு திருடுபோவது தொடர் கதையாக இருந்து வருவதாகவும், இதனை காவல்துறை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டுஉரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

  • Share on

தூத்துக்குடியில் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு மானியம்!

  • Share on