• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

  • Share on

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி  வழக்கில் சம்மந்தப்பட்ட  2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதா நகர் பகுதியை சேர்ந்த பொய்யாமொழி மகன் ரவி (எ) பொன்பாண்டி என்பவரை முன்விரோதம் காரணமாக 18.06.2021 அன்று மாதா நகர் பகுதியில் வைத்து தருவைகுளம் நவமணி தெருவை சேர்ந்த தங்கபழம் மகன் அந்தோணி சதீஷ் குமார் (எ) சதீஷ் (41), சிலுவைப்பட்டி கணபதி நகரை சேர்ந்த சாமுவேல் மகன் ஜோதிராஜா (35) மற்றும் இவர்களது நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி சதீஷ்குமார் (எ) சதீஷ் மற்றும் ஜோதிராஜா ஆகியோரை கைது செய்தனர்.

மேற்படி இவ்வழக்கின் முக்கிய நபர்களான அந்தோணி சதீஷ்குமார் (எ) சதீஷ் மற்றும் ஜோதிராஜா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம்  அறிக்கை தாக்கல் செய்தார். மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்  1) தருவைகுளம் நவமணி தெருவை சேர்ந்த தங்கபழம் மகன் அந்தோணி சதீஷ் குமார் (எ) சதீஷ்  2) சிலுவைப்பட்டி கணபதி நகரை சேர்ந்த சாமுவேல் மகன் ஜோதிராஜா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஜெயந்தி, சம்மந்தப்பட்ட நபர்களான அந்தோணி சதீஷ்குமார் (எ) சதீஷ் மற்றும் ஜோதிராஜா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.

  • Share on

சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் : புதிய அதிகாரி விசாரனையை தொடங்கினார்.

வேப்பலோடை கிராமத்தில் 39 ஆடுகளை திருடியவர் கைது!

  • Share on