• vilasalnews@gmail.com

சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் : புதிய அதிகாரி விசாரனையை தொடங்கினார்.

  • Share on

சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால்  உயிரிழந்த மகேந்திரனின் வழக்கு தொடர்பான விசாரனையை  மேற்கொள்ள வேறொரு அதிகாரி மாற்றப்பட்டத்தை தொடர்ந்து, இன்று அவர் விசாரனையை தொடங்கினார்.

சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு 20 நாள்களுக்கு முன்பாக சாத்தன்குளம் அருகிலுள்ள ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அதே போலீஸாரால் தாக்கப்பட்டார்.

ஒருநாள் முழுவதும் காவல்நிலையத்தில் துன்புறுத்தப்பட்ட மகேந்திரன், மறுநாள் வீட்டுக்குச் சென்றதில் இருந்து உடல்நலக்குறைவால் பாதிக்கபட்டவர், 10 நாள்களில் உயிரிழந்தார். போலீசாரின் மிரட்டலால் இச்சம்பவம் அப்படியே அமுங்கிப்போனது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை விஸ்வரூபம் எடுத்த நிலையில், மகேந்திரனின் தாயார் வடிவு, தன் மகன் உயிரிழப்புக்கும் அதே சர்ச்சைக்குரிய போலீஸார்தான் காரணம். மகனின் இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீதான விசாரணையில், `இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது’ என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் தலைமையிலான குழுவினர், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கி, நடத்தி வந்தனர். 

இந்நிலையில் தூத்துக்குடி ,நெல்லை,சரக சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமாருக்கு நெல்லை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் உள்ள வழக்குகள் தொடர்பாக  விசாரணை செய்து வருவதால், சாத்தான்குளம் மகேந்திரன் வழக்கு காலதமானதைத் தொடர்ந்து, அவரது வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க  மதுரை சிபிசிஐடி டி.எஸ்.பி முரளி தலைமையில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


இதனையடுத்து,  தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் வந்த மதுரை டி.எஸ்.பி.முரளி மகேந்திரன் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று இன்று விசாரணையை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த மகேந்திரனின் சகோதரியான சந்தனமாரி தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரிடம் சிபிசிஐடி டி.எஸ்.பி முரளி விசாரணை நடத்தினார்.

  • Share on

சாக்குமூட்டையில் ஆற்றுமணல் திருடியவர் கைது!

தூத்துக்குடியில் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

  • Share on