அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 15,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி தலைமையிலான போலீசார் இன்று (01.07.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஏரல் பஜார் பகுதியில் சைக்கிளில் வந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஏரல் மணலூரைச் சேர்ந்த அருள்ராஜ் மகன் டேனியல் ராஜ் (38) என்பதும், அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி வழக்கு பதிவு செய்து டேனியல் ராஜ் என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த ரூபாய் 15,000/- மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.