• vilasalnews@gmail.com

திருமண ஊர்வலத்தில் மணப்பெண் சிலம்பம், சுருள் வாள் வீசி அசத்தல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தில் மணப்பெண் சிலம்பம், சுருள் வாள் வீசி அசத்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தேமாங்குளத்தைச் சேர்ந்த மோசஸ் மகன் ராஜ்குமார். இவருக்கும் இவரது அக்காள் மகனான நிஷா என்பவருக்கும் கடந்த இருதினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஆழ்வார்திருநகரி அருகே உள்ள திருக்கோளூர் சமுதாய நலக் கூடத்தில் நடந்த திருமணத்திற்கு மணப்பெண் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகில் உள்ள நடுக்கூட்டுடன் காட்டைச் சேர்ந்த மாஸ்டர் மாரியப்பன் தலைமையில் குழுவினர் சிலம்பம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர்.

அப்போது பாரம்பரிய தமிழர்களின் கலையான சுருள் வாள் வீச்சு மற்றும் சிலம்பம் ஆகியவற்றை திருமண கோலத்தில் மணப்பெண் விளையாடி அசத்தினார். திருமணத்திற்கு வந்தவர்களும் பொதுமக்களும் இதை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். திருமணக் கோலத்தில் மணப்பெண் சுருள் வாள் மற்றும் சிலம்பம் வீசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சமீப காலமாக திருமணம் போன்ற சுப காரியங்களில் ஆடல் பாடல் என்று கொண்டாட்டம் களை கட்டுகிறது. திருமண விழாவில் மணமக்கள் உற்சாக நடனம், உறவினர்களுடன் குழு நடனம் என்று அரங்கேறி வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழர்களின் வீர விளையாட்டை பறைசாற்றும் விதமாக திருமண கோலத்தில் மணப்பெண் சுருள் வாள் வீசி சிலம்பம் சிலம்பம் ஆடிய ருசிகரமான சம்பவம் பல்வேறு தரப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


  • Share on

தூத்துக்குடியில் 355 மின்கம்பங்கள் சீரமைப்பு!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் - ஒருவர் கைது!

  • Share on