• vilasalnews@gmail.com

தூத்துக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் இலவச இ-சேவை - அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு ஏற்பாடு!

  • Share on

தூத்துக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி டூவிபுரத்தில்  சட்ட மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு புதிதாக இ-சேவை மையம் அதில் தொடங்கப்பட்டுள்ளது. அரசு இ-சேவை மையத்தில்வ ருமானச்சான்று, சாதிச்சான்று, பட்டா விண்ணப்பம், திருமண உதவி விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்து விதமான  சான்றுகளுக்கும் விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.


மேலும், எந்த சான்றோர்களுக்கு எல்லாம் கட்டணம் கட்டி விண்ணப்பம் செய்கிறோமோ அதனை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக இ-சேவை மையத்தில் இலவசமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான பணத்தை அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த பொறுப்பில் கட்டிக் கொள்கிறார். இந்த சிறப்பு ஏற்பாடு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு : ஆணையர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார்!

தூத்துக்குடியில் 355 மின்கம்பங்கள் சீரமைப்பு!

  • Share on