தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகச்சியை ஆணையர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கமானது சற்றே குறைந்து வந்த நிலையில் கடந்த இரு நாள்களாக மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்தது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளாக ஜூன் 28ஆம் தேதி 14 பகுதிகள் இருந்த நிலையில் ஜூன் 29-ஆம் தேதி மீண்டும் குறைந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதி 8 ஆக குறைந்தது. கொரனோ தொற்று பரவலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சார்பில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜூன் 30ஆம் தேதி நேற்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முதல் டோஸ் 934 பேரும், இரண்டாம் டோஸ் 441 பேர் என மொத்தம் 1375 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முக கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ நேரில் சென்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் சேர்மக்கனி, மாநகராட்சி அதிகாரிகள் பிரின்ஸ், சரவணன், ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.