• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படைத் தளத்தின் மீது பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் குண்டு வீசி தாக்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய இடங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன.

அதாவது நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணு மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் டிரோன்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுகம், விமான நிலையம் அமைந்துள்ளதால் அந்தப் பகுதிகளில் டிரோன்கள் பறக்க விடுவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு டிரோன்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கு உரிய அனுமதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற வேண்டும்.

தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் உரிய அனுமதியின்றி தடையை மீறி யாரேனும் டிரோன்களை பறக்கவிட விடுகிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விதிமுறை மீறி பறக்க விட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  • Share on

விளாத்திகுளம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது!

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு : ஆணையர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார்!

  • Share on