• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நள்ளிரவில் தனியார் ஆலையில் தீ விபத்து - உலர் பூக்கள் எரிந்து சேதம்!

  • Share on

தூத்துக்குடியில் நள்ளிரவுவில் தனியார் உலர் பூ உற்பத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடி, தாளமுத்துநகர், சமீர் வியாஸ் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 66). இவர் நேரு காலனியில் உலர் பூ உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.  இந்த ஆலையில் நேற்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து உள்ளது.

இதில் அந்த தொழிற்சாலையில் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டு இருந்த உலர் பூக்களில் தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவியது. இதில் உலர் பூக்கள் மற்றும் உலர் பூ தயாரிக்க வைத்திருந்த ரசாயனம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. ஆலையின் மேற்கூரையும் எரிந்து நாசமானது. 

இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்த அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.  இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

கொரோனா தடுப்பு நிவாரண நிதியுதவி : ஸ்ரீவைகுண்டம் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் ரூ.10 ஆயிரம் வழங்கல்!

தங்கையை கொலை செய்த அண்ணன் கைது - எஸ்.பி., நேரில் விசாரனை!

  • Share on