• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மழை நீரை சேகரிக்க புதிய குளம் : ஆணையர் சாருஸ்ரீ நேரில் ஆய்வு!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிக்க புதிதாக ஏற்படுத்தப்படும் குளத்தின் பணிகளை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது ஒரு சவாலான விஷயமாக உள்ளது. அதற்கு தீர்வு காண்பதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியின் புறநகர் பகுதிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள் அனைத்திலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சாருஸ்ரீ தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மழை வருவதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் உள்ளன. அதற்கு முன்பாக மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

ஆணையர் சாருஸ்ரீ

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மழைநீரை சேமிக்கும் வகையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் புதிதாக ஏற்படுத்தப்பட்ட சி.னா.வா.னா. குளத்தின் செயல்பாட்டு அமைப்பையும், நீர் வழித் வழித்தடங்களையும் மற்றும் மழைநீர் வடிகால்களையும் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி மையத்தில் ஒரே நாளில் 1849 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

கொரோனா தடுப்பு நிவாரண நிதியுதவி : ஸ்ரீவைகுண்டம் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் ரூ.10 ஆயிரம் வழங்கல்!

  • Share on