தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தடுப்பூசி மையத்தில் நேற்றைய தினம் ஒரே நாளில் 1849 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களில் நேற்றைய தினம் ( 28.6.2021 ) ஒரே நாளில் 1752 பேர் முதல் டோஸ்சும், 97 பேர் இரண்டாவது டோஸ்சும் என மொத்தம் 1849 பேர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.