ஆழ்வார்திருநகரி ஒன்றியம் அக்கமங்கலம் ஊராட்சி குரும்பூர் முஸ்லீம் தெரு மற்றும் பரதர் தெரு பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஒன்றியம் அக்கமங்கலம் ஊராட்சி குரும்பூர் முஸ்லீம் தெரு மற்றும் பரதர் தெரு பகுதியில் பேவர் பிளாக் சாலை திறப்பு நிகழ்ச்சி கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் தலைமையில் இன்று (29.06.2021) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு முஸ்லீம் தெரு பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் 190 மீட்டர் நீளத்திலும், பரதர் தெரு பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் 330 மீட்டர் நீளத்திலும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோகிலா, தி.மு.க.மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், ஆழ்வார்திருநகரி ஒன்றியக்குழு தலைவர் ஜனகர், முக்கிய பிரமுகர் நவீன், ராமஜெயம், செங்குளிரமேஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், கருப்பசாமி, உதவி பொறியாளர் வெள்ளைப்பாண்டி, குரும்பூர் ஊராட்சி தலைவர் பானுப்ரியா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.