காயல்பட்டனத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டனம், அக்பர்ஷா தெருவைச் சேர்ந்தவர் முகம்மது அலி மகன் முத்துவாப்பா (25), இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் இந்திரா விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து முத்துவாப்பாவை கைது செய்தார்.