அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்தவ ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து ரூபாய் 10,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று (28.06.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சுந்தரராஜ் மகன் பாக்கியராஜ் (35) என்பவர் தனது பெட்டிக்கடையில் வைத்து சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் வழக்கு பதிவு செய்து பாக்யராஜை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த ரூபாய் 10,000 மதிப்பிலான 5400 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.