• vilasalnews@gmail.com

போக்சோ சட்டத்தில் தண்டனையை அதிகப்படுத்த கோரிக்கை!

  • Share on

போக்சோ சட்டத்தில் தண்டனையை அதிகப்படுத்துதல், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளிக்கப்பட்டது.

இது தொடர்பாக சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான ராகவன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாட்டில் பாலியல் வன்முறை செயல்களை தடுப்பதற்கு போக்சோ சட்டத்தை பற்றி பள்ளிகள்,கல்லூரிகள், பெண்கள் பணி செய்யும் தொழிற் சாலைகள், அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போக்சோ சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி எட்டாம் வகுப்பு முதல் பாடமாகக் கொண்டு வரப்பட வேண்டும்.

போக்சோ சட்டத்தின்கீழ் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும். போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கை விரைந்து முடிப்பதுடன், அதுவரை அவர்களை பிணையில் வெளியில் விடக்கூடாது. மேலும், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.


  • Share on

தூத்துக்குடியில் கைதான இங்கிலாந்து போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாமீன் மனு தள்ளுபடி!

கோவில்பட்டி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது

  • Share on