• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மனைவி உள்பட 3 பேர் மீது ஆசிட் வீசிய கணவர் கைது

  • Share on

தூத்துக்குடியில் மனைவி உள்பட 3 பேர் மீது ஆசிட் வீசிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அசோக்நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மாலா (வயது 49). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

மாலாவுக்கும், தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்த சூசை மச்சாது (48) என்பவருக்கும் சுமார் 20 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை ரவி பலமுறை கண்டித்து உள்ளார். ஆனால் மாலா பழக்கத்தை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் கடந்த 26-ந் தேதி இரவு ரவி வீட்டுக்கு வந்த போது, மாலா, சூசை மச்சாது ஆகியோர் வீட்டின் முன்பு இருந்தார்களாம். அவர்களை ரவி சத்தம் போட்டு உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவி, வீட்டில் வாளியில் இருந்த ஆசிட்டை எடுத்து சூசை, மாலா ஆகியோர் மீது ஊற்றி உள்ளார். அப்போது அங்கு வந்த சூசையின் மகன் கெல்வின் (19) மீதும் ஊற்றி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைத்தில் வழக்கு பதிவு செய்து ஒர்க்‌ஷாப் உரிமையாளரான ரவியை தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து இன்று போலீசார் தூத்துக்குடியில் ரவியை கைது செய்தனர்.

  • Share on

விளாத்திகுளத்தில் சசிகலா ஆதரவு கூட்டம் - போலீசார் வழக்கு பதிவு

சசிகலா புஷ்பா மீதான எப்.ஐ.ஆர் ரத்து!

  • Share on