• vilasalnews@gmail.com

குளத்தூர் அருகே திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 3 பேர் கைது!

  • Share on

குளத்தூர் அருகே மணல் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 4 யூனிட் மணல், 2 லாரிகள் மற்றும் ஒரு ஹிட்டாச்சி இயந்திரம்  ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விளாத்திக்குளம் உட்கோட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை கலைஞானபுரம் விலக்குப்பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சம்மந்தப்பட்டவர்களை உடனே கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர்  பிரகாஷ்க்கு உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவின் பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்  மேற்பார்வையில் நேற்று குளத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா தலைமையிலான போலீசார்  உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அங்கு  சாத்தான்குளம் தச்சன்விளை பகுதியை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் பாலகிருஷ்ணன் (54), ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாதவ்ரானா மகன் பின்டுரானா (30) மற்றும் ஸ்ரீவைகுண்டம் இடையற்காடு பகுதியைச் சேர்ந்த ஞானம் மகன் ராஜ்குமார் (54) ஆகியோர் மணல் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

மேற்படி போலீசார் அவர்களை கைது செய்து, திருடிய 4 யூனிட் மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய இரண்டு லாரிகள், ஹிட்டாச்சி இயந்திரம் ஆகியபவற்றை பறிமுதல் செய்தனர்.  இது குறித்து குளத்தூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் கலா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  • Share on

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு!!

கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - சீனிவாச சித்தர்!!

  • Share on