தூத்துக்குடியில், தேனி மாவட்ட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி படுகொலையை கண்டித்து, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது படுகொலைக்கு நீதி வேண்டும் என்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, சாதிய மதவாத கொடுஞ்செயல்களை தடுக்கவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து இது தொடர்பான மனுவினை ஆட்சியரிடம் அளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழகம் பால் பிரபாகரன், தமிழர் விடியல் கட்சி சந்தனராஜ், புரட்சிகர இளைஞர் முன்னணி சுஜித், தமிழ் புலிகள் கட்சி தாஸ், திராவிட தமிழர் கட்சி சங்கர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஜலால் முகமது, ஆதி தமிழர் கட்சி சுரேஷ் வேலன், ஆதித்தமிழர் பேரவை கண்ணன், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் முகமது ஜான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஹசன், மனிதநேய மக்கள் கட்சி அலி அக்பர், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் காதர் கனி, எஸ்டிபிஐ மாமு நைனா, தமிழ் புலிகள் கட்சி கத்தார் பாலு சமூக ஆர்வலர் அருந்ததி அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.