எட்டயபுரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை அவதூறாக கூறிய கொங்கு மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரனை கண்டித்து எட்டயபுரத்தில் இந்து முன்னணி சார்பில் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு எட்டயபுரம் நகர தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கோவில்பட்டி நகர தலைவர் சுதாகரன், எட்டயபுரம் நகரச் செயலாளர் ராஜா மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பாரதி மணிமண்டபம் சென்ற இந்து முன்னணி மாநில துணைத்தலைர் வி.பி.ஜெயக்குமார் அங்குள்ள பாரதியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.