• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல்

  • Share on

தூத்துக்குடியில் இன்று  பல இடங்களி்ல் மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உட்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். 

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்று (26-ம் தேதி) நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளன. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. 


துறைமுகம் கிரீன் கேட் முன்பாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல், போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், எச்.எம்.எஸ். பொதுச் செயலாளர் சத்யா, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரசல், அமமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முககுமாரி, உட்பட பலர்  போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனையடுத்து அனைவரையும் தெர்மல் நகர் காவல்துறையினர் கைது செய்தார்.

இதுமட்டுமின்றி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சுசீ.ரவீந்திரன், ஐஎன்டியூசி சார்பில் ராஜகோபாலன், தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணகானோர் கலந்து கொண்டனர். அவர்களை மத்தியபாகம் காவல்துறையினர்  போலீசார் கைது செய்தனர்.  இதில் கலந்து கொண்ட 10 பெண்கள் உட்பட 25பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல  இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட  200 பெண்கள் உட்பட  500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

  • Share on

தூத்துக்குடி கடல் பகுதியில் பல கோடி மதிப்புள்ள ஹெராயின் படகு பறிமுதல்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரை சந்தித்து பாஜக மாநில செயலாளர் கோரிக்கை

  • Share on