தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் தூத்துக்குடி மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் விஜயகாந்த், சுப்பிரமணியன், கணேசன் , நல்லசிவம், ராமராஜன், கருப்பசாமி, பிரிட்டோ, சிவக்குமார், மாரிமுத்து, அர்ஜுன், கமல் மூர்த்தி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்க பேரவை சேர்ந்த ராஜன், பரமசிவம், சபரி, வசந், பாண்டி, விசு, சங்கர், ஆறுமுகம் உள்ளிட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்