
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மகளிர் அணி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி., வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மகளிரணி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு மகளிரணி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக கருணாநிதியின் திருஉருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கொண்டனர்.