• vilasalnews@gmail.com

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த மஞ்சள் பறிமுதல் - 5 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த  இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 2500 கிலோ  எடையுள்ள விரல் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெர்மல் (பீச்) கடற்கரை வழியாக இலங்கைக்கு விரல் மஞ்சள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  உடனடியாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளர்  கணேஷ்க்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர்  மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர்  ஆசைத்தம்பி, தனிப்பிரிவு தலைமைக் காவலர் கந்தசுப்பிர மணியன், தலைமை காவலர் பென்சிங், முதல் நிலை காவலர் செந்தில்குமார், முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம், சாமுவேல், காவலர்  முத்துப்பாண்டி மற்றும் முத்தமிழ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (26.06.2021) அதிகாலை தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

மஞ்சள் கடத்தல்

அப்போது 2500 கிலோ எடையுள்ள விரல் மஞ்சள்கள் ஒரு வேனிலிருந்து படகில் ஏற்றி இலங்கைக்கு கடத்துவதற்கு தயாராக இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. உடனே மேற்படி தனிப்படையினர் கடத்த இருந்த 2500 கிலோ விரல் மஞ்சள், படகு மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ விரல் மஞ்சளின் இந்திய மதிப்பு ரூபாய் 3 லட்சமாகும். ஆனால் இவற்றின் இலங்கை மதிப்பு ருபாய் 16 லட்சம் வரையிருக்கும் என்று சொல்லப் படுகிறது. 

மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிலுவைப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் கோவிந்த பெருமாள் (36), சுனாமி காலணி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் சேர்மராஜா (19), கீழ வைப்பாரைச் சேர்ந்த அருள் மகன் ராபின்ஸ்டன் (23), அதே பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் அருள் (55), ஜேசு மகன் விதுஸ்டன் (20) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

மேற்படி கடத்தல் சம்பவம் தெர்மல் நகர் மெரைன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் பறிமுதல் செய்த 2500 கிலோ விரல் மஞ்சள், படகு மற்றும் வேன் ஆகியவற்றையும், கைது செய்த 5 பேரையும் மெரைன் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மெரைன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த 2500 கிலோ விரல் மஞ்சள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய படகு, வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து,  சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

  • Share on

தூத்துக்குடியில் கஞ்சா பதுக்கல் - ஒருவர் கைது!

பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!!

  • Share on