தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1.100 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், சங்கர், தலைமை காவலர் பென்சிங், முதல் நிலை காவலர் செந்தில்குமார், காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம், சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (26.06.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் அருகே கோவில்பட்டி இலுப்பையூரணியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் வினோத்குமார் (23) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி நபரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.