• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் அடிக்கல் நாட்டு விழா : எம்.பி., அமைச்சர்கள் பங்கேற்பு!

  • Share on

தூத்துக்குடி மீன் துறைமுகத்தில் நடைபெற்ற ரூ.25 கோடி மதிப்பீட்டில் கூடுதல் படகு அணையும் சுவர் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

ரூ. 25 கோடி மதிப்பீட்டில் ரூபாய் கூடுதல் படகு அணையும் சுவர் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, மீன்பிடி துறைமுகத்தில் துறைமுகம் விரிவாக்கம் மற்றும் 11 பேருக்கு படகுகளில் வெளிப்பொருத்தும் எஞ்சின் வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் நிகழ்ச்சியானது தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன் வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு படகு அணையும் சுவர் பணிக்கான அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடியில் இளம் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த காவலர் பணியிடை நீக்கம் - எஸ்.பி., உத்தரவு

  • Share on