தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், அதிமுக வைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான வி.பி.செல்வக்குமார், தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ., டேவிட் செல்வின், கோவில்பட்டி நகர முன்னாள் செயலாளர் எஸ்.சங்கரபாண்டியன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் மைக்கேல் எஸ்.ராஜேஷ் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அப்போது திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர், டி.ஆர்.பாலு எம்.பி., மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாணவர் அணி துணைச் செயலாளர் உமரிசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.