கோவில்களை திறக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் கோவில்களின் முன்பு இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்களில் பொதுமக்கள் வழிபட இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும் கோவில்களை திறக்க வலியுறுத்தியும் கோவில்கள் முன்பு கற்பூர தீபம் ஏற்றி போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்ணனி அறிவித்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அனைத்து கோவில்கள் முன்பும், இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் சிவன் கோவில், வேம்படி இசக்கியம்மன் கோவில், மட்டகடை உச்சிமாகாளி அம்மன் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், ரயில்வே பத்திரகாளியம்மன் கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களின் முன்பு தேங்காய் உடைத்தும், வழிபாடுகள் நடத்தியும் போராட்டம் நடைபெற்றது. இதுபோல் கோவில்களை திறக்க அரசு அனுமதி வழங்க வலியுறுத்தி வீடுகளின் முன்பு கோலமிட்டு பொதுமக்கள் ஆதரவு தேரிவித்தனர்.
இந்த போராட்டங்களில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துகுமார் தலைமையில், வழக்கறிஞர்கள் கருப்பசாமி, இசக்கி லட்சுமி முன்னிலையில் புதுக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் சுந்தரி, ஓட்டப்பிடாரம் பொறுப்பாளர் ராகவேந்திரா, தூத்துக்குடி கிழக்கு மண்டல பொறுப்பாளர் சிவலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலவேசம், வினோத்குமார், எல்.ஆர்.சரவணகுமார், மாவட்ட ஒறுங்கிணைப்பாளர் நாரயணராஜ், மாவட்ட பேச்சாளர் ஆறுமுகம், தெற்கு மண்டல மாவட்ட பொது செயலாளர் மாதவன் மற்றும் இந்து முன்னனி உரிப்பனர்கள் ராஜேஷ், ஐயப்பன், ஆனந்த், கார்த்திக், முனியசாமி, சுடலை, கணபதி, சரண், வெங்கடாசலம், சிபு, ராஜா, ஆனந்த், முகேஷ், ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.