வெளி மாநில பெண்ணிடம் 47 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து செல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் கல்கோடா கரீம் நகரைச் சேர்ந்தவர் கோத்தாணி விஜய் மனைவி பிரியா (37). இவர் குடும்ப பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த 19.06.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு சாமியாரைப் பார்ப்பதற்கு திருச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் வந்துள்ளார்.
அப்போது திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி செல்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் ஆசிப் முஹம்மது சேக் (28) என்பவரிடம் உதவி கேட்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பிரியாவிடம் இருந்து ஆசிப் முகமது ஷேக் செல்போனை திருடியுள்ளார்.
இதுகுறித்து பிரியா அளித்த புகாரின்பேரில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி வழக்கு பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், செல்போன் டவர் மூலம் இருப்பிடத்தை கண்டறிந்து மேற்படி எதிரி ஆசிப் முகமது சேக் என்பவரை கைது செய்தார்.
மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 47,000 மதிப்பிலான செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.