• vilasalnews@gmail.com

கஞ்சா விற்பனை செய்த 7 பேர் கைது - 500 கிராம் கஞ்சா பறிமுதல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கஞ்சா விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் உத்தரவுப்படி கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள்  தலைமையில்  தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று (24.06.2021) தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ரோந்து சென்றபோது வடபாகம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் அய்யப்பன் மகன் விக்னேஷ் (25), தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அய்யப்பநகரைச் சேர்ந்த சொரிமுத்து மகன் கணேசன் (52), முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முள்ளக்காட்டைச் சேர்ந்த நசரேன் மகன் எடிசன் (51), தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சமர்வியாஸ் நகரைச் சேர்ந்த குணசேகரன் மகன் சுடலைமணி (23), செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் மஹாராஜன் (21), ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் வினோத் (20) மற்றும் சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செந்தியம்பலம் பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் மகன் ஆத்தியப்பன் (28) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மேற்படி 7 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

பிரபல ரவுடி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - எஸ்.பி.,ஜெயக்குமார் நடவடிக்கை!

வெளி மாநில பெண்ணிடம் 47 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடியவர் கைது

  • Share on