தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 35 வது வார்டில் உள்ள புதுக்குடி தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்து தரக் கோரி அப்பகுதி மக்கள் சார்பாக மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் மருதப்பெருமாள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.
மாநகராட்சி ஆணையரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
தூத்துக்குடி மாநகராட்சி 35வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான மூன்றாவது மைல் புதுக்குடி தெரு எண் 1,2 மற்றும் 3 ஆகிய மூன்று தெருக்கள் உள்ளன. இதில் தெரு எண் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு தெருக்களுக்கு தார்ச்சாலையும், மற்ற தெருக்களில் பேவர் பிளாக் சாலையும் தூத்துக்குடி மாநகராட்சி மூலம் அமைக்கப்பட இருப்பதாக அறிய வருகிறோம்.
மேற்படி தெருக்கள் அனைத்தும் தார்சாலை அமைக்க ஏதுவாக இல்லாத மிகவும் சிறிய தெருக்கள் ஆகும் எனவே தாங்கள் எங்கள் பகுதியில் ஆய்வு செய்து மூன்றாவது மைல் புதுக்குடி தெரு எண் 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று தெருக்களுக்கும் பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.