• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் சீண்டல்... தட்டிக்கேட்ட தாய் மீதும் தாக்குதல்!

  • Share on

தூத்துக்குடியில் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரையும் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்

தூத்துக்குடி பொன் சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் செல்வகணேஷ் (29) என்பவர் கடந்த 19.06.2021 அன்று தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு ட்பட்ட ஒரு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் நடந்த விவரத்தை தெரிவித்ததின் அடிப்படையில் சிறுமியின் தாயார் மேற்படி செல்வகணேஷிடம் கேட்டபோது சிறுமியின் தாயாரையும் செல்வ கணேஷ் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழும், பெண்ணை தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்தியதற்காகவும் வழக்குப்பதிவு செய்து  செல்வகணேசை தேடி வந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி தென்பாகம் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் தலைமைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று மேற்படி நபரான செல்வகணேசை கைது செய்தனர்.

இது குறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

வயர் மற்றும் இரும்பு கம்பியை திருடிய இருவர் கைது!

ஆலயங்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினர் சூடம் ஏற்றி வழிபாடு போராட்டம்!

  • Share on