பேட்மா நகரம் பகுதியில் வயர் மற்றும் இரும்பு கம்பியை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பேட்மாநகரம் பகுதியில் பேட்மா என்ற வேளாண் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் உள்ள வயர்கள் மற்றும் இரும்பு கம்பிகள் கடந்த 22.06.2021 அன்று திருடுபோயுள்ளது.
இதுகுறித்து அந்த பண்ணையில் வேலை செய்யும் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு சன்னதி தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் குமார் (49) என்பவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்ததில் ஸ்ரீவைகுண்டம் மேட்டு தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் சிவா (23) மற்றும் சின்னத்துரை மகன் ராஜா (33) ஆகியோர் சேர்ந்து அந்த பண்ணையில் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் குமார் வழக்கு பதிவு செய்து சிவா மற்றும் ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 3000 மதிப்பிலான திருடப்பட்ட வயர்கள் மற்றும் இரும்பு கம்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.