முத்தையாபுரம் அருகே மனைவியை மண்வெட்டியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவன் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் சூசை நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் முருகன் (43). இவருடைய மனைவி விஜயா (35). நேற்று (23.06.2021) குடிபோதையில் இருந்த முருகன் தனது மனைவியான விஜயாவை சந்தேகப் பட்டு அவரிடம் தகராறு செய்து மண்வெட்டியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து முருகனின் மகன் ராமச்சந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையிலடைத்தார்.