• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

  • Share on

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரமேஷ் பிளவர் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரமேஷ் பிளவர் மில்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோரமண்டல் சென்னை சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (24.06.2021) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரூ.12 லட்சம் மதிப்பிலான இசிஜி மெசின், மல்டி பாரா மானிட்டர், பாயில் அனஸ்திஸ்யா மெசின் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை ரமேஷ் பிளவர் மில்ஸ் தலைமை செயல் அதிகாரி பி.எஸ். ரமேஷ் மருத்துவ கல்லூரி முதல்வர் நேருவிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப் பாளர் பாவலன், ரமேஷ் பிளவர் மில்ஸ் நிர்வாகிகள் சந்திரசேகர், தெய்வ நாயகம், சுப்பிரமணியன், ரோட்டரி கிளப் ஆப் கோரமண்டல் சென்னை முத்தையாபிள்ளை,ராஜபாண்டி, ரவிராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பாஜக சார்பில் டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினம் அனுசரிப்பு!

மனைவியை மண்வெட்டியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவன் கைது!

  • Share on