பாரதிய ஜனதா ஜனசங்கத்தின் நிறுவனர் டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருஉருவப் படத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் பாரதிய ஜனதா ஜனசங்கத்தின் நிறுவனர் டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருஉருவப்படத் திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, ஓ.பி.சி அணி மாநிலச் செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் தங்கம், மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், மான்சிங், மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் மேரி ரொசாரி, சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ரத்தினமுரளி, செய்தி மற்றும் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன்,
பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ராணுவ பிரிவு மாவட்ட செயலாளர் ஹரிஹரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஞ்சனா, மேற்கு மண்டல பொதுச்செயலாளர்கள் முத்துபெரிய நாயகம், லிங்கசெல்வம், செயலாளர் ஜெயராமன், கிழக்கு மண்டல தலைவர் சந்தனகுமார், கிழக்கு மண்டல பிரச்சார பிரிவு தலைவர் சந்திஸ்முருகன், வடக்கு மண்டல பொதுச்செயலாளர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.