• vilasalnews@gmail.com

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு காணொளி - கனிமொழி எம்.பி., வெளியிட்டார்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு  காணொளி காட்சியை கனிமொழி எம்பி வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறும் படத்தின் காணொளி வெளியீட்டு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு குறும்படத்தினை வெளியிட்டார்.

இதில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி ஆட்சியர் ( பயிற்சி ) ஜெய் நாராயணன் மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி. ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்!

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை!!

  • Share on