• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், மாணவர்களுக்கு இணையதளம் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி முதற்கட்டமாக மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கும் பணி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடங்கியுள்ளது.

புதிய கல்வி ஆண்டில் மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள் ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பாடப்புத்தகங்களை வழங்க கல்வி துறை அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நடப்பாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியானது, தூத்துக்குடி கீழ ரெங்கநாதபுரம் தெருவில் உள்ள சி.எம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில்  மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து வந்து பாடப் புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கெளரி செய்தியாளர்களிடம் கூறுகையில்:

தூத்துக்குடி மாவட்டத்தில் 712 அரசு பள்ளிகள் மற்றும் 862 அரசு உதவி பெறும்  பள்ளிகள் என மொத்தம் 1574 பள்ளிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  • Share on

சாலை விபத்தில் கணவன் - மனைவி உயிரிழப்பு!

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு காணொளி - கனிமொழி எம்.பி., வெளியிட்டார்!

  • Share on