• vilasalnews@gmail.com

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணநிதி - மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகள் 34 நபர்களுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.2000-ஐ மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த கொரோனா நிவாரணத்தொகை ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சி இன்று (23.06.2021) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு, 34 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.2000 என மொத்தம் ரூ.68,000-ஐ வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிவாரண உதவித்தொகையாக தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.4000 இரண்டு தவணைகளாக வழங்க உத்தரவிட்டார்கள். இதில் குடும்ப அட்டை உள்ள திருநங்கைகள் அனைவரும் பயன்பெற்றார்கள். குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகள் தங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கும் தலா ரூ.2000 நிவாரண உதவித்தொகை வழங்க  தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிட்டார்கள்.

அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு தலா ரூ.2000 வழங்கும் பணிகளை  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். அதனடிப்படையில் இன்று கோவில்பட்டியில் 64 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.2000 என மொத்தம் ரூ.68,000 வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் அரசின் உதவிகளை பெற்று அவைகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, கோவில்பட்டி வட்டாட்சியர் அமுதா, நகராட்சி ஆணையர் ராஜாராம் மற்றும் அலுவலர்கள், திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

  • Share on

இலங்கை அகதிகள் முகாமில் கனிமொழி எம்பி ஆய்வு!

சாலை விபத்தில் கணவன் - மனைவி உயிரிழப்பு!

  • Share on