• vilasalnews@gmail.com

இலங்கை அகதிகள் முகாமில் கனிமொழி எம்பி ஆய்வு!

  • Share on

மாப்பிள்ளையூரணி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டார்.

மாப்பிள்ளையூரணி அருகே உள்ள ராம்தாஸ் நகர் சிலோன்காலனி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு நேரில் சென்ற தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி ஆய்வு மேற்கொண்டார்.

அகதிகள் முகாமில் உள்ள இளைஞர்கள், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் அவர்கள் இருக்கும் குடியிருப்புகளை கனிமொழி எம்.பி., பார்வையிட்டார்.

திமுக அரசு, அகதிகள் முகாமிற்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மக்களிடம் உறுதி அளித்தார்.


தொடர்ந்து, முகாமில் உள்ளவர்களுக்கு நிவாரணபொருள்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், வட்டாட்சியர் ஜஸ்டின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், வசந்தா, முக்கிய பிரமுகர்கள் ராமஜெயம், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார், மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாம் தலைவர் செந்தில் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

தாழையூத்து சிமெண்ட் தொழிற்சாலையில் 2 பைப் வெடிகுண்டுகள் பறிமுதல்

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணநிதி - மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

  • Share on