தாழையூத்து சிமெண்ட்தொ ழிற்சாலையில் நேற்று இரவு இரண்டு பைப் வெடிகுண்டுகள் ஒரு ரிமோட்டும் போலீஸ் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தாழையூத்தில் சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது. அதில் உள்ள செக்யூரிடிக்கி நேற்று மாலை திடீரென ஒரு போன் வந்துள்ளது. போனில் பேசியவர் உங்கள் தொழிற்சாலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு போனை இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து தாழையூத்து போலீசிற்கு செக்யூரிட்டி தகவல் தெரிவித்தார்.
போலீஸ் டிஎஸ்பி அர்ச்சனா தலைமையில் காவல் ஆய்வாளர் பத்மநாபன் மற்றும் காவலர்கள் வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் விரைந்து சென்று திடீர் சோதனை செய்தனர் சோதனையில் இரண்டு பைப் வெடிகுண்டுகளும், ஒரு ரிமோட்டும் கண்டெடுக்கப்பட்டன. வெடிகுண்டை போலீசார் செயலிழக்க செய்தனர்.
வெடி குண்டு வைத்தவர்கள் யார் போனில் பேசியவர் யார் என்பது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.