• vilasalnews@gmail.com

ஒரு கட்சியால் அடைந்த சேர்மன் பதவியை தக்க வைக்க இன்னொரு கட்சி தாவலா?பதவியை ராஜினாமா செய்க... அதிமுக ஆர்ப்பாட்டம்!!

  • Share on

கோவில்பட்டியில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரை  கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரான கஸ்தூரி, மற்றும் அவரது கணவர் சுப்புராஜ் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், அவர்கள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந் ததை கண்டித்தும், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப் பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்தார். 

இதில்  ஒன்றிய செயலாளர்கள் வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் செல்வக்குமார், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் துறையூர் கணேசன், அதிமுக நிர்வாகிகள் ராமசந்திரன், ராமர், வேலுமணி, ஜெமனி(எ)அருணாச் சலசாமி, செண்பகமூர்த்தி, ஆபிரகாம் அய்யாத்துரை, நீலகண்டன், பாலமுருகன், பழனிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  • Share on

கிராமப்புற மகளிரை மேம்படுத்தும் ஆரி கலைப் பயிற்சி

தாழையூத்து சிமெண்ட் தொழிற்சாலையில் 2 பைப் வெடிகுண்டுகள் பறிமுதல்

  • Share on