சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று 21.6.2021 திங்கட்கிழமை தூத்துக்குடி தெற்கு மாவட்டம் வடக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பாக 40 இடங்களில் யோகா பயிற்சி நடைபெற்றது.
ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது. 2014 செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா சபையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசும்போது ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்பட வேண்டும் என முன் மொழிந்தார். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், வடக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று (21.6.2021) திங்கட்கிழமை 40 இடங்களில் யோகா பயிற்சியானது, மண்டல தலைவர் எஸ்.பி.எஸ் கனகராஜ், தலைமையில் மண்டல பொதுச் செயலாளர் செல்லப்பா,வினோத், முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் எம் ஆர் கனகராஜ், மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் ஜெய கிருஷ்ணன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட தலைவர் குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரசுப்பு, மண்டல துணைத் தலைவர் சுப்புராஜ், மண்டல செயலாளர்கள் ரேவதி, பாலமுருகன், சேர்மகுருமூர்த்தி, கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் மூர்த்தி, அரசு தொடர்பு பிரிவு மண்டல தலைவர் சண்முகசுந்தரம், பிறமொழி பிரிவு மண்டல தலைவர் சிவானந்தம், ஓபிசி மண்டல செயலாளர் ராஜன், செய்தி மற்றும் ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், செய்தி மற்றும் ஊடக பிரிவு மண்டல செயலாளர் வெள்ளை பெருமாள், நெசவாளர் பிரிவு மண்டல செயலாளர் மாரியப்பன், மற்றும் வடக்கு மண்டல ஐடி விங் தலைவர் காளி ராஜா, மண்டல துணை தலைவர் சங்கர் கணேஷ், செயலாளர் பிரகாஷ், தலைவர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் ஐயப்பன், மாரிமுத்து, மற்றும் வெள்ளை முருகன், செல்வகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.