• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் இன்று ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  தலைமையில் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 31 ஆண் நபர்கள் 9 பெண் நபர்கள் ஊர்க்காவல் படை வீரர்களாக (Home Guards) தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், விண்ணப்பதாரர்கள் இன்று (24.11.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் உரிய சான்றிதழ்களுடன் ஆஜராகுமாறு கடந்த 08.11.2020 தினசரி நாளேடுகளில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 100 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 695 பேர் ஆஜராகியிருந்தனர். ஆஜரான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உயரம், கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில்  நடைபெற்றது.


இத்தேர்வு தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கோபி,  தூத்துக்குடி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  இளங்கோவன், காவல் ஆய்வாளர்கள் மீஹா, அன்னபூரணி, தூத்துக்குடி ஊர்க்காவல்படை தளவாய்  பாலமுருகன், துணை தளவாய் கௌசல்யா ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இத்தேர்வில் 31 ஆண் விண்ணப்பதாரர்களும், 9 பெண் விண்ணப்பதாரர்களும் தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல்படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  • Share on

விவசாயிகள் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் -  ஆட்சியா் செந்தில் ராஜ் தகவல்

மினிகாய் தீவு பகுதியில் சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் விடுவிப்பு

  • Share on