• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் - வாகனம் பறிமுதல்

  • Share on

விளாத்திகுளம் அருகே ரேஷன் அரிசி  கடத்தல் தொடர்பாக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும்  வாகன சோதனை  நடைபெற்று வருகிறது.

அதன்படி,  விளாத்திகுளம் காவல் துணை  கண்காணிப்பாளர் பிரகாஷ்  மேற்பார்வையில்  விளாத்திகுளம் காவல் நிலையத்துக்குட்பட்ட ஆற்றங்கரை கிராமத்தில் இன்று விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த TN72 AF 7651என்ற வாகனத்தை சோதனை செய்ததில் 50 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.


உடனடியாக போலீசார் அந்த வாகன ஓட்டுனரான கயத்தாறு, அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன் மகாராஜன் (29) என்பவரை கைது செய்து,  மேற்படி வாகனத்தையும், ரேசன் அரிசி  மூட்டைகளையும் பறிமுதல் செய்து   தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.

    

  • Share on

தமிழகத்தின் தலைநகரில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை : தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் கோரிக்கை!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாஜக சார்பாக 40 இடங்களில் யோகா பயிற்சி

  • Share on