• vilasalnews@gmail.com

விவசாயிகள் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் -  ஆட்சியா் செந்தில் ராஜ் தகவல்

  • Share on

விவசாயிகள் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் -  ஆட்சியா் செந்தில் ராஜ் தகவல்


தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் திருந்திய பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் 2020 ராபி பருவ பயிர்களை காப்பீடு செய்து பயன்பெறலாம் எனவே விவசாயிகள் தாங்கள் பயிர் செய்துள்ள சோளம், கம்பு, மக்காசோளம், உளுந்து, பாசிபயறு, நிலக்கடலை, எள் சூரியகாந்தி, பருத்தி மற்றும் கோடை நெல் பயிர்களை காப்பீடு செய்து பயன்பெற தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர்  செந்தில் ராஜ், கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை  நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப் படுகிறது. 2020-21 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் ராபி பருவ பயிர்களை திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய முன்செல் ஆணை வெளியிடப் பட்டுள்ளது.
 
இதன்படி நடப்பாண்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், கருங்குளம், தூத்துக்குடி, கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் வட்டாரங்களில் உள்ள 190 குறு வட்டங்களில் ராபி இதர பயிர்களுக்கும் (சோளம், கம்பு, மக்காசோளம், உளுந்து, பாசிபயறு, நிலக்கடலை, எள் சூரியகாந்தி, பருத்தி) தூத்துக்குடி, திருவைகுண்டம், கருங்குளம், திருச்செந்தூர் ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் மற்றும் விளாத்திகுளம் வட்டாரங்களில் உள்ள 15 குறு வட்டங்களில் நெல்-IIIபயிருக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மக்காசோளப் பயிருக்கு மட்டும் வருவாய் கிராமமட்டத்தில் 312 வருவாய் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறாக  கோடை பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 15 பிப்ரவரி 2021 மற்றும் இதர ராபி பருவ பயிர்களான உளுந்து, பாசிப்பயறு பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 16 டிசம்பர் 2020ம், மேலும் மக்காச்சோளம் சோளம் மற்றும் பருத்தி பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 21 டிசம்பர் 2020ம், கரும்பு பயிருக்கு இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 31.10.2021ம், கம்பு, எள், சூரியகாந்தி, நிலக்கடலை பயிருக்கு பதிவு செய்ய கடைசி நாள் 18.01.2021ம் மற்றும்  தோட்டக்கலை பயிர்களான வாழைக்கு 01.03.2021ம், வெங்காயம் மற்றும் வெண்டைக்கு 15.02.2021ம், கொத்தமல்லி மற்றும் மிளகாய்க்கு 30.01.2021ம் பதிவு செய்ய கடைசி நாள் ஆகும். அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தில் வங்கிகளில் கடன்பெறும் விவசாயிகள் மற்றும் கடன்பெறா விவசாயிகள் அவரவர் விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடுசெய்து கொள்ளலாம். நெல் பயிரிடும் விவசாயிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் (IFFCO Tokio General Insurance Company
Limited) அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ,பொது சேவைமையங்கள் (Common
Service Centres - CSC) மூலமாகவோ வங்கிகள்  தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே நடப்பு ராபி பருவத்தில் பயிர் சாகுபடிசெய்துள்ள அனைத்து விவசாயிகளும் எதிர்பாராத இடர்பாடுகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகளில் இருந்து காத்துக் கொள்ள இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் இயற்கைபேரிடர் ஏற்படும் பட்சத்தில், காப்பீட்டிற்கான பதிவுகால அவகாசம் குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் காப்பீடுசெய்வதற்கான இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியேபயிர் காப்பீடு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயிர் காப்பீடு செய்யதேவையான ஆவணங்கள்:
கோடை நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.424, மக்காசோளப்பயிருக்கு ரூ.199, சோளப்பயருக்கு ரூ.104, கம்பு பயிருக்கு ரூ.99, உளுந்து மற்றும் பாசிபயிருக்குரூ.192, நிலக்கடலை பயிருக்கு ரூ.245 எள் பயிருக்குரூ.104 சூரியகாந்தி பயிருக்குரூ.136, பருத்தி பயிருக்கு ரூ.539,கரும்பு பயிருக்கு ரூ.2600, வாழைபயிருக்கு ரூ.3115, வெங்காயம் பயிருக்கு ரூ.945, மிளகாய் பயிருக்கு ரூ.1089, கொத்தமல்லி பயிருக்கு ரூ.400, வெண்டை பயிருக்கு ரூ.798 பயிர் காப்பீட்டுக் கட்டணமாக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டைநகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான இரசீதைபெற்றுக் கொள்ளவேண்டும். காப்பீடுபதிவு செய்யப்படும் அடங்கலில் உள்ளவருவாய் கிராமம், சர்வேஎண், சாகுபடி செய்யப்படும் பயிர் மற்றும் பரப்பு, வங்கிகணக்கு முதலான அடிப்படை விபரங்களை ஒப்புகைசீட்டில் சரிபார்த்து பெறவேண்டும். காப்பீடு பதிவின் ஆவணங்கள் மற்றும் இரசீதை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துகொள்ளவேண்டும். இறுதிநேர நெரிசலை தவிர்த்து அனைத்து விவசாயிகளும் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share on

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவரின் மகனுக்கு அரசு பணி ஆணை: தமிழக முதல்வா் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

  • Share on