• vilasalnews@gmail.com

கல்பனா சாவ்லா விருது : விண்ணப்பங்கள் வரவேற்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் :

கல்பனா சாவ்லா விருது ஆண்டு தோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

2021-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாயத்தில் மிகப்பெரிய துணிச்சலான தைரியமிக்க சாதனை புரிந்த பெண்கள் இவ்விருதுதினை பெற விண்ணப்பிக்கலாம். 

மேலும், அனைத்து துறையில் உள்ள பெண்களும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய சாதனை சான்றுகளுடன் விண்ணப்பங்களை 25.06.2021 மாலை 5.00 மணிக்குள், "மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்"  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி - 628 001. அலைபேசி எண் : 7401703508 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

  • Share on

சாயர்புரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் ஒருவர் கைது - மான் கொம்பு, வீச்சு அரிவாள், கத்தி பறிமுதல்

தூத்துக்குடியில் ஜூன் 22 முதல் 25வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

  • Share on