தூத்துக்குடியில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 08.06.2021 அன்று தூத்துக்குடி குருஸ்புரத்தைச் சேர்ந்த ட்ருமேன் மனைவி ஜூலியட் (40) மற்றும் தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் கருப்பசாமி (38) ஆகிய இருவரும் மதுரை, திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஜூலியட் மற்றும் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர்.
மேற்படி, இவ்வழக்கின் முக்கிய நபரான ஜூலியட் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பொறுப்பு ஜெயந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தூத்துக்குடி குருஸ்புரத்தைச் சேர்ந்த ட்ருமேன் மனைவி ஜூலியட் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஜெயந்தி, சம்மந்தப்பட்ட ஜூலியட்டை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து மதுரை பெண்களுக்கான சிறப்பு சிறையில் அடைத்தார்.