தூத்துக்குடியில் பாஜக சார்பாக சர்வதேச யோகா தினம் பாஜக மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் கடைபிடிக்கப்பட்டது.
ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டில் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.
அதன் அடிப்படையில் 2014 டிசம்பர் 15 அன்று 193 உறுப்பினர்கள் கொண்ட ஐநா நாடுகள் பொதுச் சபை ஜூன் 21ஆம் நாளை பன்னாட்டு யோகா நாள் ஆக அறிவித்து தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து மண்டலங்கள் மற்றும் ஒன்றியங்களிலும் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
வடக்கு மண்டல தலைவர் கனகராஜ் , மேற்கு மண்டல பொறுப்பாளர் பாலமுருகன், கிழக்கு மண்டல தலைவர் சந்தனகுமார், தெற்கு மண்டல தலைவர் முத்து கிருஷ்ணன், ஆகியோர் தலைமையில் மண்டலங்களிலும், ஒன்றியங்களில் ஒன்றிய தலைவர்கள் தலைமையிலும் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது